கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் - ‘டி43’ அறிவிப்பு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் - ‘டி43’ அறிவிப்பு
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் - ‘டி43’ அறிவிப்பு

நடிகர் தனுஷின் 43வது படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்க உள்ளார்.

தனுஷின் ‘பட்டாஸ்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதனை அடுத்து அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். ஏற்கெனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை நடித்து முடித்துள்ளார். இது தனுஷின் 40 ஆவது படமாகும். இதற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை.

இந்நிலையில், தனுஷின் 43ஆவது படத்தை கார்த்திக் நரேன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் இதனை தயாரிக்க உள்ளது. இப்படம் வரும் அக்டோபரில் வெளியாகும் எனத் தெரிகிறது. இது சம்பந்தமான அறிவிப்பை கார்த்திக் நரேன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாஃபியா’ இந்த மாதம் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் அருண் விஜய் நடித்துள்ளார். ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசன்னா நடித்துள்ள இப்படத்தை லைகா புரடெக்‌ஷன் தயாரித்துள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் 2016இல் வெளியான துருவங்கள் 16 திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com