“சிறந்த ஆட்சியை எதிர்ப்பார்க்கிறோம்!” - மு.க ஸ்டாலினுக்கு தனுஷ், லோகேஷ் கனகராஜ் வாழ்த்து

“சிறந்த ஆட்சியை எதிர்ப்பார்க்கிறோம்!” - மு.க ஸ்டாலினுக்கு தனுஷ், லோகேஷ் கனகராஜ் வாழ்த்து

“சிறந்த ஆட்சியை எதிர்ப்பார்க்கிறோம்!” - மு.க ஸ்டாலினுக்கு தனுஷ், லோகேஷ் கனகராஜ் வாழ்த்து
Published on

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், திமுக கூட்டணி கட்சி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று, அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில், “தனிப்பெரும் வெற்றி பெற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம். மக்கள் பணி சிறக்க எமது வாழ்த்துக்கள். முதல் முறையாக மக்கள் பணிசெய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நண்பர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அற்புதமான வெற்றியைப் பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களிடமிருந்து எங்கள் அனைவரின் நலனுக்காக ஒரு சிறந்த ஆட்சியை எதிர்பார்க்கிறோம்” என்று வாழ்த்துகளோடு கோரிக்கையும் வைத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com