ரஜினி, கமலின் பாராட்டால் நெகிழ்ந்த தேவிஸ்ரீபிரசாத்!
மலேசிய கலைவிழாவில் ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணங்களை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திர கலைவிழாவை நடத்தியது. இதில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவின் இறுதி நிகழ்ச்சியாக தேவிஸ்ரீபிராசத்தின் ஆடலுடன் பாடல் நடைபெற்றது. இதில் கொஞ்சம் கூட புத்துணர்ச்சி குறையாமல் பாடிக்கொண்டே ஆடிய அவர், ரஜினி மற்றும் கமல்ஹாசனின் பாராட்டையும் பெற்றார்.
இந்நிலையில் மலேசிய விழா தொடர்பாக பகிர்ந்துள்ள அவர், “மலேசிய கலைவிழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடினேன். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்து திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து, ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ரசித்து கேட்டனர். அப்போது நான் மேடையிலிருந்து இறங்கி இருவரின் பாராட்டிற்கும் நன்றி தெரிவித்த போது, அவர்கள் தங்களின் மத்தியில் என்னை அமரவைத்துக் கொண்டனர். புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இது என்னுடைய வாழ்நாளில் இது வரை கிடைக்காத சந்தோஷம்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது விக்ரம் நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்திற்காக தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார்.