\
மேசை மீது கால் போட்டு பேட்டியளித்த தேவரகொண்டா.! சர்ச்சை எதிரொலிப்பு

மேசை மீது கால் போட்டு பேட்டியளித்த தேவரகொண்டா.! சர்ச்சை எதிரொலிப்பு

மேசை மீது கால் போட்டு பேட்டியளித்த தேவரகொண்டா.! சர்ச்சை எதிரொலிப்பு
Published on

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா பத்திரிகையாளருக்கு பேட்டியளிக்கும்போது மேசை மீது கால் போட்டு பேசிய விவகாரம் சர்ச்சையாகி அவரது அணுகுமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் விஜய் தேவர்கொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பின்போது, விஜய் தேவரகொண்டா ஒரு பத்திரிகையாளரிடம் பேசும்போது மேசை மீது கால்களை வைத்து பேட்டியளித்துள்ளார். இதைத்தொடர்ந்து தன்னால் சுதந்திரமாக பேச முடியவில்லை என்று பத்திரிகையாளர் அவரிடம் கூறினார். அதைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா அவரை ஆறுதல்படுத்த முயன்றார்.

இந்நிலையில், அவரது அணுகுமுறையை குறிப்பிட்டு பல்வேறு விமர்சனங்களும், செய்திகளும் எழுந்தன. இதனால் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா. அந்த ட்விட்டர் பதிவில், ” எல்லோரும் தங்கள் துறையில் வளர முயற்சி செய்வார்கள், அவர்களின் முதுகில் எப்போதும் ஒரு இலக்கு இருக்கும், அதற்கு நாங்கள் போராடுவோம். மேலும் நீங்கள் உங்களுக்கு நேர்மையாக இருந்தால் மற்றும் அனைவருக்கும் சிறந்ததை விரும்பினால், மக்களின் அன்பும் மற்றும் கடவுளின் அன்பும் உங்களைப் பாதுகாக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/TheDeverakonda/status/1560485216594305024

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com