அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள்
அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள்pt

அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள்.. ரஜினிக்கு 4வது இடம்! முதலிடத்தில் யார் தெரியுமா?

அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள் பட்டியலில் தென்னிந்திய நடிகர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
Published on

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களின் பட்டியலில் தென்னிந்திய நடிகர்கள் முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.

யார், யாருக்கு என்ன இடம்?

முதல் இடம் - ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட தரவுகளின்படி, படம் ஒன்றுக்கு 300 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

இரண்டாவது இடம் - 130 கோடி ரூபாய் முதல் 275 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் நடிகர் விஜய் இரண்டாம் இடத்திலும்,

மூன்றாவது இடம் - 150 கோடி ரூபாய் முதல் 250 கோடி ரூபாய் சம்பாதிக்கும் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் 3 ஆவது
இடத்திலும் உள்ளனர்.

stampede death case allu arjun questioned by hyderabad police
அல்லு அர்ஜுன்எக்ஸ் தளம்

நான்காவது இடம் - 125 கோடி ரூபாய் முதல் 270 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் நடிகர் ரஜினிகாந்த் 4ஆம் இடத்திலும்,

5வது இடம் - 100 கோடி ரூபாய் முதல் 275 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் நடிகர் அமீர் கான் 5ஆம் இடத்திலும்,

6வது இடம் - 100 கோடி ரூபாய் முதல் 200 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கும் நடிகர் பிரபாஸ் 6ஆவது இடத்திலும் இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

7வது இடம் - 105 கோடி ரூபாய் முதல் 165 கோடி ரூபாய் வரை
சம்பளம் பெறும் நடிகர் அஜித் குமார் 7ஆவது இடத்திலும்,

ஷாருக் கான், சல்மான் கான்
ஷாருக் கான், சல்மான் கான்எக்ஸ் தளம்

8, 9வது இடம் - 100 கோடி ரூபாய் முதல் 150 கோடி ரூபாய் வரை
சம்பாதிக்கும் நடிகர் சல்மான் கான் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் 8, 9 ஆகிய இடங்களிலும்,

10வது இடம் - 60 கோடி ரூபாய் முதல் 145 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கும் நடிகர் அக்ஷய் குமார் 10ஆவது இடத்திலும் இருப்பது
தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com