\
குடிபோதை... பக்கத்து வீட்டாருடன் பிரபல ஆடை வடிவமைப்பாளர் தகராறு

குடிபோதை... பக்கத்து வீட்டாருடன் பிரபல ஆடை வடிவமைப்பாளர் தகராறு

குடிபோதை... பக்கத்து வீட்டாருடன் பிரபல ஆடை வடிவமைப்பாளர் தகராறு
Published on

குடிபோதையில் பக்கத்து வீட்டுக்காரர்களைத் தாக்கியதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வித்யாசமான ஆடை  தேர்வு மற்றும் தனித்துவான ரசனையால் பலரையும் கவர்ந்தவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரோஹித்பால். இவர் டெல்லியில் உள்ள டிஃப்ன்ஸ் காலனியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ரோஹித்பால் தனது உறவினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தனது இல்லத்தில் மது அருந்தி உள்ளார். அப்போது ரோஹித் பாலுக்கும் அவரின் அண்டை வீட்டில் வசிப்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கோபம் அடைந்த பால் தனது உறவினர்களுடன் சேர்ந்து கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரோஹித் பாலின் அண்டை வீட்டுக்காரர்கள் டெல்லி காவல் நிலையத்தில் அவரின் மீது புகார் செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ரோஹித் பால் மற்றும் அவரின் 3 உறவினர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.  பின்பு அவர்களை காவல் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அதன் பின்பு ரோஹித் பால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். ரோஹித் பால் அளவுக்கு அதிகமாக குடித்ததே இந்த சண்டை பெரிதானதுக்கு காரணம் என்று அக்கம்பக்கத்தினர் கூறி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com