டெல்லியில் பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் மெழுகு சிலையை மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் மெழுகு சிலை அருங்காட்சியகத்தை வைத்திருக்கும் லண்டனின் புகழ்பெற்ற மேடம் டுஸாட்ஸ் நிறுவனம் தமது 23 கிளையை டெல்லியில் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதன் முன்னோட்டமாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் தத்ரூபமான மெழுகு சிலையை டெல்லியில் திறந்துள்ளது. இதனுடன் அமெரிக்க பாப் இசைப் பாடகி லேடி காகா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் மெழுகு சிலையும் திறக்கப்பட்டது.