சினிமா
ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதையில் தீபிகா!
ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதையில் தீபிகா!
ஆசிட் தாக்குதலில் காயமடைந்து உயிர் பிழைத்த லட்சுமி அகர்வாலின் கதையில் தீபிகா படுகோன் நடிக்கிறார்.
டெல்லியை சேர்ந்தவர் லட்சுமி அகர்வால். இளைஞர் ஒருவர் இவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார். மறுப்புத் தெரிவித்துவந்தார் லட்சுமி. இதையடுத்து அந்த இளைஞரால் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானார் லட்சுமி. அப்போது அவர் வயது 15. இது தொடர்பான வழக்கில் தான் கடைகளில் ஆசிட் விற்பதற்கு நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்காக குரல் கொடுத்துவரும் லட்சுமி, சில டிவி நிகழ்ச்சிகளை நடத்தினார். இவரது வாழ் க்கை கதை சினிமாவாகிறது. இதில் நடிகை தீபிகா படுகோன், லட்சுமி அகர்வாலாக நடிக்கிறார். மேக்னா குல்சார் இயக்கும் இந்தப் படத்தை தீபிகாவே தயாரிக்கிறார்.