\
ரஜினியின் அடுத்தப் படத்தில் இணையும் தீபிகா படுகோனே?

ரஜினியின் அடுத்தப் படத்தில் இணையும் தீபிகா படுகோனே?

ரஜினியின் அடுத்தப் படத்தில் இணையும் தீபிகா படுகோனே?
Published on

ரஜினியின் அடுத்தப் படத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அதற்கடுத்ததாக, ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும், ஏஜிஎஸ் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கவிருக்கிறார் என்றும், அவருடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோனே ‘கோச்சடையான்’ படத்தில் நடித்திருந்தார். மேலும், தென்னிந்திய படமான ’பிரபாஸ் 21’ படத்திலும் பிரபாஸுடன் தீபிகா படுகோனே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com