டென்னிஸ் வீரரை காதலிக்கிறார் தீபிகா? போட்டுக்கொடுத்த முன்னாள் காதலி

டென்னிஸ் வீரரை காதலிக்கிறார் தீபிகா? போட்டுக்கொடுத்த முன்னாள் காதலி

டென்னிஸ் வீரரை காதலிக்கிறார் தீபிகா? போட்டுக்கொடுத்த முன்னாள் காதலி
Published on

தமிழில் கோச்சடையான் படத்தில் நடித்தவர் இந்தி நடிகை தீபிகா படுகோன். இவர் இந்தி பட ஹீரோ ரன்பீர் சிங்கை காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால், இப்போது புதிய செய்தி வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. பிரபல டென்னீஸ் வீரர் செர்பியாவைச் நோவாக் ஜோகோவிக்கை, தீபிகா காதலித்துவருகிறார் என்பதுதான் அது.
இவர்கள் இருவரும் கடந்த வருடத்தில் இருந்து டேட்டிங்கில் இருப்பதாக, நோவோக்கின் முன்னாள் காதலி நடாசா பெக்வலக் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ’என்னைவிட்டு நோவோக் பிரிந்ததில் வருத்தமில்லை. தீபிகா படுகோனுடனாவது அவர் மகிழ்ச்சியாக இருக்கட்டும்’ என்று நடாசா கூறியுள்ளார். 
நோவோக், தனது தோழி ஜெலனாவை கடந்த 2014-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் நடாசா, இந்தக் காதல் விவகாரத்தைக் கூறியிருப்பது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com