ஈரான் இயக்குனர் படத்தில் மலையாள மாளவிகா

ஈரான் இயக்குனர் படத்தில் மலையாள மாளவிகா

ஈரான் இயக்குனர் படத்தில் மலையாள மாளவிகா
Published on

சில்ரன் ஆஃப் ஹெவன், த கலர் ஆஃப் பாரடைஸ், பரன் உட்பட உலகம் முழுவதும் பேசப்பட்ட பல படங்களை இயக்கியவர், ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி.

இவர் 2015-ம் ஆண்டு இயக்கிய ’முகமது’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். மஜித் இப்போது ’பியாண்ட் த கிளவுட்ஸ்’ என்ற இந்தி படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இதில் ஹீரோயினாக நடிக்க இந்தி நடிகை கங்கனா ரனவ்த், தீபிகா படுகோன் உட்பட பலர் பேசப்பட்டனர். இப்போது மலையாள நடிகை மாளவிகா மோகனன் தேர்வாகியுள்ளார். இவர் பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள். இந்தப் படத்தில் இந்தி நடிகர் சாகித் கபூரின் தம்பி இஷான் ஹீரோவாக நடிக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com