சினிமா
பாதுகாப்பான காதல் துணையை தேடுவது கஷ்டம்: தீபிகா படுகோனே கருத்து
பாதுகாப்பான காதல் துணையை தேடுவது கஷ்டம்: தீபிகா படுகோனே கருத்து
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பாதுகாப்பான காதல் துணையைத் தேடுவது கடினமான காரியமாக இருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த பாகுபலி என பாலிவுட் ரசிகர்களால் புகழப்பட்டு வரும் பத்மாவதி படத்தில் நடித்து வரும் நடிகை தீபிகா படுகோனே. 18 நூற்றாண்டில் வாழ்ந்த பத்மாவதி உண்மைக் கதையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டீசர் சமீபத்தில்தான் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தீபிகா, பாதுகாப்பான காதல் துணையைத் தேடுவது கடினமான காரியமாக இருக்கிறது. ஒருவருடைய வெற்றி மற்றும் ஆசைகளை புரிந்து கொள்ளக்கூடிய காதல் உறவை கண்டுபிடிப்பது சிக்கலானதாக இருக்கிறது. சினிமா துறையில் சிறப்பாக நடித்தாலும் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது எளிதானதல்ல என்று கூறினார்.