ரன்வீருடன் ரகசிய டூர்: வீடியோ எடுத்த ரசிகையை விளாசித்தள்ளிய தீபிகா படுகோன்!

ரன்வீருடன் ரகசிய டூர்: வீடியோ எடுத்த ரசிகையை விளாசித்தள்ளிய தீபிகா படுகோன்!

ரன்வீருடன் ரகசிய டூர்: வீடியோ எடுத்த ரசிகையை விளாசித்தள்ளிய தீபிகா படுகோன்!
Published on

பாலிவுட்டின் டாப் ஹீரோயின் தீபிகா படுகோன். இவரும் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங்கும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக கிசு கிசு கிளம்பியது. ‘பத்மாவத்’ பட ரிலீஸுக்கு மூலம் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் தீபிகாவும், ரன்வீர் சிங்கும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த காதல் ஜோடி, நடிப்பு பிசிக்கு இடையே, அமெரிக்காவுக்கு ரகசிய டூர் சென்றுள்ளது. அங்கு பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றிய இந்த ஜோடி, புளோரிடாவில் உள்ள டிஸ்னிலேண்டுக்குச் சென்றது. மேக்கப் இல்லாமல் இருவரும் சென்றதால் பல இந்தியர்களுக்கு இவர்களை யாரென்று தெரியவில்லை. இதனால் சுதந்திரமாகச் சுற்றிப் பார்த்தனர். 

இதற்கிடையே ஜைனாப் கான் என்ற ரசிகை தீபிகாவைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவர் ரன்வீருடன் கையைப் பிடித்துக்கொண்டு செல்வதைக் கண்டதும் ஜைனாப்புக்கு ஆச்சரியமாக இருந்தது. இதையடுத்து தனது செல்போனில் அவர்களை வீடியோ எடுத்தார். இதைக் கண்ட தீபிகா, ரன்வீரின் கையை விடுவிடுத்து விட்டு புன்னகையுடன் ஜைனாப் அருகில் வந்தார். 

இதைக் கண்ட ஜைனாப் ’உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா?’ என்று கேட்டார். ஆனால் வேகமாக வந்த தீபிகா, அந்த வீடியோவை மறைத்தார். பின் ஜைனாப்பைக் கடுமையாகத் திட்டினார். அவருடன் ரன்வீரும் சேர்ந்து திட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ரசிகை, அந்த வீடியோவை வெளியிட்டு அங்கு நடந்ததை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில், ‘நான் விடுமுறைக்காக அங்கு சென்றேன். தற்செயலாக அவர்களை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். உடனடியாக வீடியோ எடுத்தேன். அவர்கள் சுதந்திரத்தில் தலையிட நினைக்கவில்லை. அது என் வேலையும் இல்லை. ஆனால், அவர்கள் நடந்துகொண்ட விதம் என்னை நிலைகுலைய வைத்தது’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com