தமிழ் இசைக்கலைஞர்களை அனிருத் புறக்கணிக்கிறார் : திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம்

தமிழ் இசைக்கலைஞர்களை அனிருத் புறக்கணிக்கிறார் : திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம்
தமிழ் இசைக்கலைஞர்களை அனிருத் புறக்கணிக்கிறார் : திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம்

தர்பார் படத்தில் தமிழ் இசைக் ‌கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்காதது மன வருத்தத்தை ஏற்‌படுத்தியுள்ளதா‌க திரைப்பட‌‌ இசைக் கலைஞர்கள் சங்க தலைவர் தீனா தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் அதன் தலைவர் தீனா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “தர்பார் திரைப்படத்தில் வெளிநாட்டு இசை கலைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்த பட்டுள்ளனர். தமிழ் திரைப்பட இசை கலைஞர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்காதது தங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இசையமைப்பாளர் அனிருத்திடம் பலமுறை வலியுறுத்தியும் தான் இசையமைக்கும் படத்தில் தொடர்ச்சியாக தமிழ் இசைக்கலைஞர்களை புறக்கணிக்கிறார். திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் விதிமுறைகளை மீறி அனிருத் செயல்படுகிறார். இதுகுறித்து திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திடம் புகார் அளிக்க உள்ளோம். மேலும் இனி வரும் திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரைப்பட இசை கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” என தீனா வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com