\
‘கில்லி’,  ‘டிஷ்யூம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் மாறன் கொரோனாவால் மரணம்

‘கில்லி’, ‘டிஷ்யூம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் மாறன் கொரோனாவால் மரணம்

‘கில்லி’, ‘டிஷ்யூம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் மாறன் கொரோனாவால் மரணம்
Published on

‘கில்லி’, ‘டிஷ்யூம்’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்த துணை நடிகர் மாறனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார்.

முன்னதாக, ‘கில்லி’ படத்தில் ஆதிவாசி கதாபாத்திரத்தில் நடித்த மாறன் ஜீவாவின் டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கானா பாடல்களை நன்றாக பாடக்கூடிய மாறன் அவ்வப்போது கச்சேரிகளில் கானா பாடல்களை பாடி வந்துள்ளார். கொரோனா தொற்றிற்கு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து பலியாகி வருவது சோகத்தை ஏற்படுத்திவருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com