”நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்தவர் சிவாஜி கணேசன்”: கமல்ஹாசன்

”நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்தவர் சிவாஜி கணேசன்”: கமல்ஹாசன்
”நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்தவர் சிவாஜி கணேசன்”: கமல்ஹாசன்

"நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்தவர் சிவாஜி கணேசன்" என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

‘பராசக்தி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவையே தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் ஆட்டிப்படைத்த நடிகர் சிவாஜி கணேசன் கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி இதே நாளில்தான் மறைந்தார். இன்று அவரது 20 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சினிமாத்துறையினர் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் ”திரை நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்துச் சென்றிருக்கும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று. ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம்வரை நடிகர் திலகத்தின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும்” என்று புகழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com