\
துருவ நட்சத்திரத்தில் விக்ரமுடன் டிடி கலகல..!

துருவ நட்சத்திரத்தில் விக்ரமுடன் டிடி கலகல..!

துருவ நட்சத்திரத்தில் விக்ரமுடன் டிடி கலகல..!
Published on

விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி நடிக்கிறார்.

தொகுப்பாளினியாக அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. தனது கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர். தனுஷ் இயக்குனராக அறிமுகமான பவர் பாண்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். டிடி-யின் நடிப்பை நடிகர் தனுஷ் வெகுவாக பாராட்டியிருந்தார். இந்நிலையில் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும், துருவ நட்சத்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க டிடி ஒப்பந்தமாகியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில்சிம்ரன் மற்றும் ராதிகா ஆகியோரும் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com