\
சிம்புவுடன் போட்டி போடும் மாடல் அழகி தயானா எரப்பா

சிம்புவுடன் போட்டி போடும் மாடல் அழகி தயானா எரப்பா

சிம்புவுடன் போட்டி போடும் மாடல் அழகி தயானா எரப்பா
Published on

தயானா எரப்பா ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் சிம்புவுடன் போட்டிப் போடும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைப்பெற்று வந்தது. அந்தப் பகுதிகள் முடிவடைந்துள்ள நிலையில் செர்பியாவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய படப்பிடிப்புகள் ஒவ்வொரு கட்டமாக நிறைவை எட்டி வருகின்றன. முதலில் அருன் விஜய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள் முழுவதுமாக எடுக்கப்பட்டன. அவர்கள் இறுதிப்படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வெளியேறிவிட்டனர். அடுத்து சிம்பு, விஜய்சேதுபதி உண்டான காட்சிகள் துபாயில் படமாக்கப்பட்டன. அதன் பின் ஜோதிகா பங்கேற்றார். இப்போது சிம்பு மற்றும் மாடல் அழகி தயானா எரப்பாவின் காட்சிகள் செர்பியாவில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் சிம்புக்கு எதிரான கதாப்பாத்திரத்தில் தயானா நடிக்கும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. 

சிம்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், “நாங்கள் ‘செக்கச்சிவந்த வானம்’ படப்பிடிப்பின் இறுதி காட்சிகளை முடித்துவிட்டோம். இந்த வாய்ப்பை என்னை நம்பி வழங்கியதற்காக இயக்குநர் மணிரத்னம் சாருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் ஒருநாளும் நினைத்துகூட பார்த்ததில்லை என் வாழ்நாளில் மணிரத்னம் படத்தில் நடிப்பேன் என்று. அவரது ‘அஞ்சலி’படத்தில் நடிக்காததற்காக நான் இன்னும் வருதுகிறேன். ஆனால் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்ததற்காக பெருமை கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com