டார்ஜிலிங்கில் தங்கும் விடுதிக்கு சூப்பர் ஸ்டார் பெயர் !

டார்ஜிலிங்கில் தங்கும் விடுதிக்கு சூப்பர் ஸ்டார் பெயர் !
டார்ஜிலிங்கில் தங்கும் விடுதிக்கு சூப்பர் ஸ்டார் பெயர் !

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினி தனது அடுத்த பட வேலைகளில் பிசியாகி விட்டார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் சூட்டிங்கிற்காக படக்குழுவினர் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் சென்றுள்ளனர். 

கர்சியாங்கில் உள்ள அலிட்டா ஹோட்டல் மற்றும் ரிசார்ட்டில் ரஜினி தங்கவைக்கப்பட்டார். ரிசார்ட் இயக்குனர் தங்கும் அந்த பங்களாவை ரஜினிகாந்த் தங்குவதற்கு ஒதுக்கியிருந்தார்கள். அவர் அங்கு தங்கி 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ரஜினி தங்கியிருந்த பங்களாவுக்கு  ‘ ரஜினிகாந்த் வில்லா # 3’ என்றும் அங்குள்ள சாய் டீ பார் லவுஞ்சுக்கு ‘தலைவா ஸ்பெஷல்’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.  ‘ ரஜினிகாந்த் வில்லா #3’என்ற பெயர் பலகையுடன் ரஜினி மற்றும் அலிட்டா ஹாட்டல் மேலாண்மை இயக்குநர் மெகுல் பரேக் இருக்கும் புகைப்படங்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய அலிட்டா ஹோட்டல் மேலாண்மை இயக்குனர் மெகுல் பரேக்  “எங்கள் அன்பையும் மரியாதையையும் அவருக்கு காட்டுவதற்கான ஒரு சிறிய பங்களிப்பு தான் அவருடைய பெயர் சூட்டுதல் ” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com