\
உலகம் முழுவதும் 7000 திரைகள்: முழு வீச்சில் களம் இறங்கியுள்ள தர்பார் குழு!

உலகம் முழுவதும் 7000 திரைகள்: முழு வீச்சில் களம் இறங்கியுள்ள தர்பார் குழு!

உலகம் முழுவதும் 7000 திரைகள்: முழு வீச்சில் களம் இறங்கியுள்ள தர்பார் குழு!
Published on

தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் 7000 திரைகளில் வெளியாகவுள்ளது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்’. ரஜினியின் 167-வது படமான தர்பாரில் ரஜினிகாந்த் போலீஸ்
அதிகாரியாக நடித்துள்ளார். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் வரும் 9-ம் தேதி தர்பார் திரைப்படம் வெளியாகவுள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள தர்பாருக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது தர்பார் பட
புரமோஷனில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தர்பார் திரைப்படம் இந்தியா முழுவதும் 4000 திரைகளில் வெளியாகவுள்ளது என
தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தி இந்து நாளிதழுக்கு பேசிய லைகாவின் முதன்மை செயல் அதிகாரி கண்ணன், படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி என்று பரவும் செய்தி வதந்தி என்று தெரிவித்தார். மேலும், தமிழ்த்திரைப்படங்கள் இதுவரை வெளிவராத இடங்களிலும் தர்பார் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். உலகம் முழுவதும் சுமார் 7000 திரைகளில் படம் வெளியாகவுள்ளது. இந்தியாவில் மட்டும் 4000 திரைகளில் வெளியாகவுள்ளது. படத்தின் விளம்பரத்திற்காக ரூ.7-8 கோடி வரை செலவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com