''உன் தர்பார் அமைய மக்கள் தருவார்கள் நல்ல தீர்ப்பு'' - ரஜினி ரசிகர்கள் போஸ்டர்கள்!

''உன் தர்பார் அமைய மக்கள் தருவார்கள் நல்ல தீர்ப்பு'' - ரஜினி ரசிகர்கள் போஸ்டர்கள்!
''உன் தர்பார் அமைய மக்கள் தருவார்கள் நல்ல தீர்ப்பு'' - ரஜினி ரசிகர்கள் போஸ்டர்கள்!

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்’. ரஜினியின் 167-வது படமான தர்பார் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நாளை வெளியாகவுள்ளது. ரஜினியின் படம் வெளியாகவுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஜப்பானில் இருந்தும் சென்னைக்கு ரசிகர்கள் வருகை தந்துள்ளனர்.

user

இந்நிலையில், படத்தை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள பல போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அரசியல் பிரவேசத்தைக் குறிக்கும் விதமாக பல போஸ்டர்கள் தர்பாருக்காக அவரது ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ளன.

user

மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரில், ''தமிழக வளர்ச்சிக்கு தேவை தென்னிந்திய நதிநீர் இணைப்பு. அதற்கு உன் தர்பார் அமைய மக்கள் தருவார்கள் நல்ல தீர்ப்பு'' என்ற வாசககம் இடம்பெற்றுள்ளது.மற்றொரு போஸ்டரில் ''இதுவரை வாக்களித்தோம் கடமைக்கு! இனிமேல் வாக்களிப்போம் நேர்மைக்கு'' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது

user

திருச்சியில் திரையரங்கு ஒன்றின் முன்பு அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு தமிழ்நாடு அரசு தலைமை செயலகம் மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. அதில் 2021 தமிழக தர்பார் என்று எழுதப்பட்டு அருகில் ரஜினி நிற்பது போல உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com