பிரபல நடிகர் டேனியல் பாலாஜிக்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை
பிரபல நடிகர் டேனியல் பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பிரபல நடிகர் டேனியல் பாலாஜிக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்த நிலையில், அவர் தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைந்து வர வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக, தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது டேனியல் பாலாஜியும் இணைந்துள்ளார். தனியார் தொலைக்காட்சி சீரியல் மூலம் அறிமுகமான டேனியல் பாலாஜி வெள்ளித்திரையில் ‘ஏப்ரல் மாதத்தில்’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.குறிப்பாக கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் இவர் ஏற்று நடித்த அமுதன் என்ற வில்லன் கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் பொல்லாதவன், என்னை அறிந்தால், வடசென்னை, பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.