\
சல்மானை வீழ்த்திய அமீர்கான்...!

சல்மானை வீழ்த்திய அமீர்கான்...!

சல்மானை வீழ்த்திய அமீர்கான்...!
Published on

மிக குறுகிய தினங்களில் 375 கோடி வசூலை கடந்து சென்றுள்ளது அமீர்கானின் தங்கல். இதன்மூலம், சல்மானின் சுல்தான் பட வசூலையும் தங்கல் முறியடித்ததுள்ளது.

அமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையில் கலக்கியது எனலாம். ஹிந்தி, தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. மிகக்குறைந்த நாளில் 300 கோடியை ஈட்டி இந்திய அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.

அமீர்கானின் இந்தப் படம் புத்தாண்டுக்கு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றதுடன், வசூலிலும் சாதனையை படைத்துள்ளது. ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலும் தங்கல் படம் வெளியாகி இந்தியாவில் 17 நாட்களில் 375 கோடி வசூலை கடந்தது. அமீர்கானின் திறமையான நடிப்பும், சிறந்த கதையம்சமே படத்தின் வசூலுக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்தியாவிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com