\
சீனாவில் ஹாலிவுட் பட வசூலை ஓரங்கட்டிய தங்கல்!

சீனாவில் ஹாலிவுட் பட வசூலை ஓரங்கட்டிய தங்கல்!

சீனாவில் ஹாலிவுட் பட வசூலை ஓரங்கட்டிய தங்கல்!
Published on

தீபிகா படுகோன் நடிப்பில் சீனாவில் வெளியான ஹாலிவுட் படத்தின் வசூலை ஓரங்கட்டிய தங்கல் திரைப்படம் 1,066 கோடி வசூலித்து அங்கு சாதனை படைத்துள்ளது. 
 
நிதேஷ் திவாரி இயக்கத்தில், அமீர் கான் நடித்த படம், தங்கல். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டு வசூலில் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து சீனாவில் மே 5ம் தேதி, வெளியிடப்பட்ட இந்த படத்திற்கு அங்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து நேற்று வரை சுமார் 1,066 (165.53M டாலர்) கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் சீனாவில் வெளியிடப்பட்ட இந்திய படங்களில், அதிகமாக வசூலான படம் என்ற பெருமையை தங்கல் பெற்றுள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு சீனாவில் 6,600 திரையரங்குகளில் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான xxx return of the xander cage படத்தின் வசூலை (164M டாலர் ) தங்கல் படம் முறியடித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com