சீனாவில் வெளியிடப்பட்டுள்ள இந்தியப் படமான தங்கல் 800 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில், அமீர் கானின் நடிப்பில், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் டங்கல். இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டு வசூலில் சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து சீனாவில் மே 5ம் தேதி, சுமார் 7000 திரையரங்ககுளில் வெளியிடப்பட்ட இந்த படத்திற்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இன்று வரை சுமார் 800 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் சீனாவில் வெளியிடப்பட்ட இந்திய படங்களில் அதிக வசூலான படத்தில் டங்கல் முதலிடம் பிடித்துள்ளது.