பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு தாதாசாகெப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரைக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஒப்புதல் அளித்துள்ளார்.
டெல்லியில் அடுத்த மாதம் 3ஆம் தேதி வி்க்யான் பவனில் நடைபெறும் விழாவில், இந்த விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்குவார். விஸ்வநாத்துக்கு தங்கத் தாமரை விருதும், 10 லட்ச ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும். 87 வயது நிரம்பிய கே.விஸ்வநாத், சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து போன்ற பிரபலமான படங்களை இயக்கியவர். இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவராகப் போற்றப்படும் விஸ்வநாத் தமிழில் குருதிப்புனல், ராஜபாட்டை, புதிய கீதை, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.