\
‘அப்பா உடல்நலம் தேறி வருகிறார்’ எஸ்.பி.பி. சரண்

‘அப்பா உடல்நலம் தேறி வருகிறார்’ எஸ்.பி.பி. சரண்

‘அப்பா உடல்நலம் தேறி வருகிறார்’ எஸ்.பி.பி. சரண்
Published on

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமண்யம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நலன் கவலைக்கிடமாக இருந்த நிலையில் தற்போது மெல்ல மீண்டு வருகிறார் என அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் அவரது மகன் சரண் பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளது ‘அப்பா உடல்நலன் தேறி வருகிறார் என் அப்பாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் என்னிடம் சொல்லியுள்ளார்கள். அப்பாவுக்கு சுவாசிப்பதில் சிரமம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 

சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களை அப்பா அடையாளம் கண்டுக் கொண்டுள்ளார். அதோடு ‘தம்ஸ் அப்’ எனவும் கையை உயர்த்தி காட்டியுள்ளார். அடுத்து வரும் நாட்களில் அப்பா பூரண குணமடைவார் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது’ என்றார்.    

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com