\
டொரண்டோ தமிழ் இருக்கைக்கு டி.இமான் பாடல்!

டொரண்டோ தமிழ் இருக்கைக்கு டி.இமான் பாடல்!

டொரண்டோ தமிழ் இருக்கைக்கு டி.இமான் பாடல்!
Published on

டொரண்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்கு, இசை அமைப்பாளர் டி. இமான் உருவாக்கிய ‘தமிழ் கீதம்’ பாடல் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக நிதி முழுவதுமாக திரட்டப்பட்டுவிட்டது. இதையடுத்து லண்டன் உட்பட சில நாடுகளின் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்கான பணிகளை அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப் படும் என்று கனடா தமிழ் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. அங்கு அமைக்கப்பட இருக்கும் தமிழ் இருக்கைக்கான பாடலாக, டி.இமான் இசை அமைத்த "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" பாடல் தமிழ் கீதமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

கனடா சென்றுள்ள டி.இமான் இதை ட்விட் டரில் பதிவிட்டுள்ளார். கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்புக்கு நன்றி தெரிவித்துள் ள அவர், உலகம் முழுவதும் உள்ள திறமையான தமிழ் இசைக் கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறும்போது, "கனடாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான டொரண்டோ பல்கலைக்கழகம் வழங்கியி ருக்கும் இந்த கவுரவம், உலகமெங்கிருக்கும் தமிழர்களின் பெருமையாகவே கருதுகிறேன். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை தொடர்ந்து டொரண்டோ பல்கலைக்கழகமும் ’தமிழ்’ மொழியை அங்கீகரிப்பது வரவேற்கத்தக்கது" என்றார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com