கோலி -அனுஷ்காவுக்கு குவியும் வாழ்த்துகள்!

கோலி -அனுஷ்காவுக்கு குவியும் வாழ்த்துகள்!

கோலி -அனுஷ்காவுக்கு குவியும் வாழ்த்துகள்!
Published on

புதிதாக திருமணமான, விராட் கோலி, அனுஷ்கா சர்மாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். இதை இருவரும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் இருந்து ஓய்வு வேண்டும் என்று விராத் கோலி கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டார். இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வளித்தது. திருமணத்துக்காகத்தான் இந்த ஓய்வு என்பதை மீடியா கண்டுபிடித்தது. ஆனால், அனுஷ்காவும் விராத் கோலியும் இதுபற்றி மூச்சு விடவில்லை.

இந்நிலையில் இவர்கள் தெற்கு இத்தாலியின் டஸ்கனி நகரின் உள்ள போர்கோ பினோச்சிட்டோ ரிசார்ட்ஸில் இவர்கள் திருமணம் நடந்தது. இதை இருவரும் சமூக வலைத்தளம் மூலம் நேற்று அறிவித்தனர். 

இதையடுத்து இந்த புதுமண தம்பதியருக்கு சச்சின் டெண்டுல்கர் உட்பட ஏராளமான கிரிக்கெட் வீரர்கள், பிரஞ்ச அழகி மனுஷி சில்லார், இஷா அம்பானி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதியும் சோயிப் அக்தரும் அடங்குவர். சமூக வலைத்தளங்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் இன்னும் குவிந்துவருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com