’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாகமுடன் நடனமாடும் டேவிட் வார்னர்! - வீடியோ

’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாகமுடன் நடனமாடும் டேவிட் வார்னர்! - வீடியோ

’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாகமுடன் நடனமாடும் டேவிட் வார்னர்! - வீடியோ
Published on

’மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் உற்சாகமுடன் நடனம் ஆடி இருப்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

தீபாவளியையொட்டி வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூல் சாதனை செய்தது. கொரோனா சூழலில் வெளியான படங்களில் சூப்பர் ஹிட் அடித்தப் படம் என்ற பெருமையும் ’மாஸ்டர்’ படத்திற்கே உண்டு. இப்படத்தின் ’வாத்தி கம்மிங்’ பாடல் படம் வெளியாவதற்கு முன்பே இந்தியா முழுக்க வைரல் ஆனது. படம் வெளியானதிலிருந்து இப்போதுவரை உலகம் முழுக்க ரசிகர்கள் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே, ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பலரும் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தனர். அதேபோன்று சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் சமீபத்தில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், ஐபில் சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் அவரது அணி வீரர்களுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு குதூகலத்துடன் நடனம் ஆடியிருக்கிறார். ஏற்கனவே, டேவிட் வார்னரும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு தமிழ் பாடல்களுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com