நடிகர் கிரேஸி மோகன் காலமானார்

நடிகர் கிரேஸி மோகன் காலமானார்

நடிகர் கிரேஸி மோகன் காலமானார்
Published on

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேஸி மோகன் காலமானார். அவருக்கு வயது 66.

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பிற்பகல் 2 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. 

கிரேஸி மோகன் 1949-ம் ஆண்டு பிறந்தார். தமிழ்த் திரையுலகில் கதை- வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் இருந்த கிரேஸி மோகன் நாடக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல மேடை நாடகங்களை இயக்கியும் நடித்துள்ளார். அடிப்படையில் பொறியாளரான இவர், ‘பொய்க்கால் குதிரை’ படத்தின் மூலம் வசன கர்த்தாவாக அறிமுகமானார்.

அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாகவும் கிரேஸி மோகன் பணியாற்றியுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com