\
இயக்குநர் எஸ்.பி முத்துராமனுக்கு கொரோனா தொற்று உறுதி

இயக்குநர் எஸ்.பி முத்துராமனுக்கு கொரோனா தொற்று உறுதி

இயக்குநர் எஸ்.பி முத்துராமனுக்கு கொரோனா தொற்று உறுதி
Published on: 

இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் எஸ்.பி முத்துராமன். அவருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.முத்துராமனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது எனவும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com