\
கொரோனா பரிசோதனையில் 'நெகட்டிவ்'- படக்குழுவினருக்கு பாதித்ததால் தனிமைப்படுத்திக்கொண்ட ரஜினி

கொரோனா பரிசோதனையில் 'நெகட்டிவ்'- படக்குழுவினருக்கு பாதித்ததால் தனிமைப்படுத்திக்கொண்ட ரஜினி

கொரோனா பரிசோதனையில் 'நெகட்டிவ்'- படக்குழுவினருக்கு பாதித்ததால் தனிமைப்படுத்திக்கொண்ட ரஜினி
Published on: 

ரஜினிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் வந்திருப்பதாக ‘அண்ணாத்த’ படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கட்சிப் பணிகள் இருப்பதால், முதலில் தனது காட்சிகளை முடித்துவிடும்படி வேண்டுகோள் விடுத்ததால் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தற்போது படமாக்கி வருகிறது படக்குழு.

இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த்  கொரோனா பரிசோதனை மேற்கோண்டதாகவும் அதில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதாகவும் படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com