‘பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட தடையில்லை; ஆனால்...’ நீதிமன்ற உத்தரவு சொல்வது என்ன?

பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டுள்ளது.
high court
high courtpt desk

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew - பதிவிறக்கம் செய்க!

பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த தயாரிப்பாளர் ராஜகணபதி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கடந்த 2016ஆம் ஆண்டு ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் நான் தயாரித்த ஆய்வுக்கூடம் என்ற படத்தின் கதையை காப்பியடித்து பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி உருவாக்கி உள்ளார். எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும் நஷ்ட ஈடாக 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.

Pichaikaran 2
Pichaikaran 2pt desk

இந்த வழக்கில் விஜய் ஆண்டனி தாக்கல் செய்த பதில் மனுவில், “ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்த தகவலும் எனக்கு தெரியாது. அந்த படத்தை நான் பார்த்தது கூட இல்லை. இந்த வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்தேன். இரு படங்களுக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை” என கூறியிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சௌந்தர் இன்று பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில், பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட விஜய் ஆண்டணிக்கு அனுமதி அளித்துள்ளார்.

cinema poster
cinema posterpt desk

மேலும், படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை ஆடிட்டர் சான்றிதழுடன் 60 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com