\
பாகுபலி 2 படத்துக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு

பாகுபலி 2 படத்துக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு

பாகுபலி 2 படத்துக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு
Published on

பாகுபலி படத்தின் இரண்டாவது பாகத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா உட்பட பலர் நடித்துள்ள படம், ’பாகுபலி 2’. இந்த மாதம் 28-ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. தமிழகத்தில் இப்படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்.எஸ்.கிருஷ்ணன் வெளியிடுகிறார். இதற்காக ஏஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றாராம். இதைத் திரும்ப செலுத்தவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பணத்தை திரும்ப கொடுக்காமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் ஏஸ் மீடியா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கல்யாண சுந்தரம், தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு, ஸ்ரீகிரீன் புரடெக்ஷன் நிறுவனம் வரும் 18ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com