வருமான வரி ஏய்ப்பு வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களில் முக்கிய திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவுக்கு எதிராக வருமான வரித்துறை, வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் ஞானவேல் ராஜா தனது வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணை, எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணையின்போது, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நடைமுறைக்காக நோட்டீஸ் அனுப்பியும் ஞானவேல்ராஜா ஆஜராகவில்லை என்றும் அதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை சார்பில் வாதிட்டப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு உத்தரவிட்ட நீதிமன்றம், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை நவம்பர் 27-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது