ஞானவேல் ராஜாவுக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து

ஞானவேல் ராஜாவுக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து

ஞானவேல் ராஜாவுக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து
Published on

வரி ஏய்ப்பு‌ வழக்கில் திரைப்‌படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நீதிமன்றத்தில் ச‌‌ரணடைந்ததையடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை எழும்பூர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கடந்த 2007-08, 2008-09 ஆண்டுகளில் தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி‌ ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடப்பட்டது. 

பலமுறை வாய்ப்பளித்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால், ஞானவேல் ராஜாவுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்த ஞானவேல் ராஜா, பிடிவாரண்டை திரும்பப்பெறுமாறு கோரிக்கை விடுத்தார். அதனை‌ ஏற்றுக்‌கொண்ட நீதிபதி, பிடிவாரண்டை திரும்ப பெற்று உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com