சின்மயி நீக்கத்துக்கு இடைக்கால தடை

சின்மயி நீக்கத்துக்கு இடைக்கால தடை
சின்மயி நீக்கத்துக்கு இடைக்கால தடை

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டதற்கு, சென்னை உரிமையியல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

திரைத்துறையில் பெண்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படுவதாக மீ-டூ மூலம் சின்மயி பதிவிட்டு இருந்தார். இதன் எதிரொலியாக திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளாக சந்தா செலுத்தாததால் சின்மயி நீக்கப்பட்டதாக சங்கம் சார்பில் விளக்கம் தரப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை இரண்டாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் சின்மயி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், 2006-ம் ஆண்டிலேயே சங்கத்திற்கான நுழைவுக் கட்டணமும், வாழ்நாள் உறுப்பினர் கட்டணமும் தாம் செலுத்திவிட்டதாகவும், 2018-ம் ஆண்டு சங்கம் வெளியிட்ட உறுப்பினர் பட்டியலில் தமது பெயரும் உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். எவ்விளக்கமும் கேட்காமலேயே தம்மை சங்கத்தில் இருந்து நீக்கி உள்ளதாகவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்நிலையில், இம்மனு நீதிபதி முருகேசன் முன் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, சங்கத்தில் இருந்து சின்மயியை நீக்கிய உத்தரவுக்கு வரும் 25-ம் தேதிவரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் ராதாரவி, பொதுச்செயலாளர் கதிரவன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி ஆணையிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com