\
”கொரோனா ஏழைகளை பிச்சைக்காரனாக மாற்றும்” - ட்விட்டரை சூடாக்கிய விஜய் ஆண்டனி பதிவு

”கொரோனா ஏழைகளை பிச்சைக்காரனாக மாற்றும்” - ட்விட்டரை சூடாக்கிய விஜய் ஆண்டனி பதிவு

”கொரோனா ஏழைகளை பிச்சைக்காரனாக மாற்றும்” - ட்விட்டரை சூடாக்கிய விஜய் ஆண்டனி பதிவு
Published on

”கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும்” என்று நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

தனது ட்விட்டர் பக்கத்தில், ”கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்” என்று பதிவிட்டுள்ளார். 

இதனை பலரும் ரீட்வீட் செய்து தங்களது அதிர்ச்சி கலந்த கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ’நம்மளைப் போலவே மன அழுத்தத்தில் இருக்கிறார் போல. இதுவும் கடந்து போகும்’ என்று சிலர் கருத்திட்டு வருகிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com