நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அதர்வா குறிப்பிட்டதாவது, “ கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன்.
விரைவில் நான் குணம் பெற்று பணிகளை தொடர்வேன் என்று நம்புகிறேன்.” இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதர்வா மறைந்த நடிகர் முரளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.