முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் 1 லட்சம் அறிவிப்பு!

முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் 1 லட்சம் அறிவிப்பு!
முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் 1 லட்சம் அறிவிப்பு!

தயாரிப்பாளரும் சென்னை நகர திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவருமான அபிராமி ராமநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 1 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இதனையொட்டி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள்,நிறுவனங்கள் நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனையொட்டி,  தயாரிப்பாளரும் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவருமான அபிராமி ராமநாதன் 1 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். தமிழ் சினிமா துறையில் இருந்து முன்மாதிரியாக அறிவித்த அவரின், இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com