\
சந்தானம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘குக் வித் கோமாளி’  புகழ்

சந்தானம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ புகழ்

சந்தானம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ புகழ்
Published on

‘குக் வித் கோமாளி’ மூலம் கவனம் ஈர்த்த புகழ் தற்போது அஜித்தின் ‘வலிமை’, சிவகார்த்திகேயனின் ‘டான்’, அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இப்படங்களில் எல்லாம் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தம் ஆனார் புகழ்.

இப்படத்தின் படப்பிடிப்புக்கு சமீபத்தில் வாங்கிய புதுக்காருடன் சென்ற புகழுக்கு சந்தானம், காரில் வைக்க வெள்ளி விநாயகர் சிலையை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, இப்படத்தின் 80 சதவீத காட்சிகளை படமாக்கி விட்டனர். மேலும் உள்ள 20 சதவீத காட்சிகளையும் விரைவில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். சந்தானம் ஏற்கனவே தெலுங்கில் வெற்றியடைந்த ’மரியாத ராமண்ணா’ என்ற படத்தை தமிழில் ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற பெயரில் ரீமேக் செய்து இருந்தார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக தெலுங்கு ரீமேக்கில் சந்தானம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் வெற்றியடைந்த ’ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com