சினிமா
‘காசேதான் கடவுளடா’ ரீமேக்: மிர்ச்சி சிவா, யோகிபாபுவுடன் இணைந்த சிவாங்கி
‘காசேதான் கடவுளடா’ ரீமேக்: மிர்ச்சி சிவா, யோகிபாபுவுடன் இணைந்த சிவாங்கி
கடந்த 1972 ஆம் ஆண்டு சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், லட்சுமி நடிப்பில் வெளியான 'காசேதான் கடவுளடா' நகைச்சுவை திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை மிர்ச்சி சிவா நடிப்பில் ஆர்.கண்ணன் தற்போது ரீமேக் செய்கிறார். பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த நிலையில், இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி.
சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பில் மிர்ச்சி சிவா,பிரியா ஆனந்த், யோகிபாபு, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.