\
Chef Damu
Chef Damu Credit: SBS Tamil

குக் வித் கோமாளி புகழ் சமையல் நிபுணர் செஃப் தாமு காலமானார்!

பத்ம ஸ்ரீ விருதுவென்ற சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் என்ற அதிர்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது.
Published on: 
Summary

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். கின்னஸ் சாதனை படைத்த இவர், சமையல் துறையில் சிறப்பான பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருது பெற்றார். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்ற முனைவர் கே. தாமோதரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

செஃப் தாமு காலமானார்
செஃப் தாமு காலமானார்

2010-ம் ஆண்டில், 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

சமையல் கலையில் இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பின் காரணமாக பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கௌரவப்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் வரும் குக் வித் கோமாளி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே அதிக அளவில் பிரபலமானவர்.

Chef Damu
‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து, தாயே திரிசூலி..’ பிரபல பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!
Chef Damu
தேனிசைத் தென்றல் ’தேவா’ உடல்நலக்குறைவால் காலமானார்!
Chef Damu
’அபூர்வ சகோதரர்கள் to லிட்டில் ஜான்..’ புகழ்பெற்ற இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com