\
’குக் வித் கோமாளி’ அஸ்வின் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் புகழ் - அதிகாரபூர்வ அறிவிப்பு

’குக் வித் கோமாளி’ அஸ்வின் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் புகழ் - அதிகாரபூர்வ அறிவிப்பு

’குக் வித் கோமாளி’ அஸ்வின் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் புகழ் - அதிகாரபூர்வ அறிவிப்பு
Published on

’குக் வித் கோமாளி’ அஸ்வின், புகழ் இருவரும் புதிய படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற ‘குக் வித் கோமாளி’யில் கவனம் ஈர்த்தவர்கள் என்றால், அது சிவாங்கி, புகழ், அஸ்வின் உள்ளிட்டவர்கள்தான். இந்நிகழ்ச்சியில், பிரபலமடைந்ததால் சிவாங்கி, புகழ் இருவரும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார்கள். புகழ் அஜித்தின் ‘வலிமை’ படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி முடிவடைந்தது.

இந்நிலையில், அஸ்வினும் புகழும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். அஸ்வின் ஹீரோவாகவும் புகழ் நகைச்சுவை நடிகராகவும் நடிக்கவுள்ளார். புத்தாண்டையொட்டி இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹரிஹரன் இயக்கவுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com