யூடியூபில் 125 மில்லியன் பார்வைகளைக் கடந்த அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’ பாடல்

யூடியூபில் 125 மில்லியன் பார்வைகளைக் கடந்த அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’ பாடல்
யூடியூபில் 125 மில்லியன் பார்வைகளைக் கடந்த அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’ பாடல்

அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’ பாடல் யூடியூபில் 125 மில்லியன் பார்வைகளையும் ஒன்னரை மில்லியன் லைக்ஸ்களையும் கடந்துள்ளது.

குக் வித் கோமாளி’ மூலம் கவனம் ஈர்த்த அஸ்வின் தற்போது ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேசமயம், சமீபத்தில் அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’ பாடல் வெளியாகி மாபெரும் சூப்பர் ஹிட் அடித்து வைரலானது. சின்னத்திரை நடிகர் நடிகர்களிலிருந்து டிக்டாக் பிரபலங்கள் வரை பலரும் இப்பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார்கள். ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் ‘குட்டி பட்டாஸ்’ இடம் பிடித்தது.

அஸ்வின், ரெபா ஜான் நடிப்பில் சந்தோஷ் தயாநிதி இப்பாடலுக்கு இசையமைத்து பாடியிருந்தார். இப்போதும், இப்பாடலுக்கு பலரும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அந்தளவுக்கு பாடல் வரிகளும் சந்தோஷ் தயாநிதியின் குரலும் கவனம் ஈர்த்தது. இந்த நிலையில், ’குட்டி பட்டாஸ்’ பாடல் யூடியூபில் 125 மில்லியன் பார்வைகளையும் ஒன்னரை மில்லியன் லைக்ஸ்களையும் குவித்துள்ளது. இதனை, அஸ்வின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com