Aneet Padda controversyweb
சினிமா
இஸ்லாமிய மத உணர்வைப் புண்படுத்தினாரா பாலிவுட் நடிகை..? அவமதித்துவிட்டதாக விமர்சனம்!
இஸ்லாமிய மத உணர்வைப் புண்படுத்திவிட்டதாக சயாரா படத்தின் நடிகை விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
Summary
இஸ்லாமிய மத உணர்வைப் புண்படுத்திவிட்டதாக சயாரா படத்தின் நடிகை விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
‘சயாரா’ திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை அனீத் படா (AneetPadda) இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகசர்ச்சை எழுந்துள்ளது.
’ லப் பே ஆத்திஹே துவா” (Lab Pe Aati Hai Dua) என்ற உருதுப் பாடலை அனீத் படாவும் அவரதுதோழிகளும் இணைந்து பாடும் பழைய காணொளி ஒன்று வைரலாகியுள்ளது. இதன் மூலம் அனீத் படா, மதம் சார்ந்த பாடலை அவமதித்து விட்டதாக சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்துவருகின்றனர்.
ஆனால் அந்தப்பாடலுக்கும் மதத்துக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்றும் அது ஒரு கவிதை மட்டுமே என்றும் அனித் படாவுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

