காங். சார்பில் மும்பையில் போட்டியிடுகிறார் ஊர்மிளா மடோன்கர்!

காங். சார்பில் மும்பையில் போட்டியிடுகிறார் ஊர்மிளா மடோன்கர்!
காங். சார்பில் மும்பையில் போட்டியிடுகிறார் ஊர்மிளா மடோன்கர்!

பிரபல நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடக்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். 

தமிழில், கமல்ஹாசன் நடித்த ’சாணக்கியன்’, ’இந்தியன்’ படங்களில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். ராம் கோபால் இயக்கிய ’ரங்கீலா’, ‘சத்யா’ உட்பட ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ள ஊர்மிளா, மலையாளம், கன்னடம், மராத்தி படங்களிலும் நடித்துள்ளார். 

இப்போது அரசியல் கட்சிகள், நடிகர், நடிகைகளை கட்சிக்குள் இழுத்து வருகின்றன. அந்த வகையில் இவரை காங்கிரஸ், தங்கள் கட்சிக்கு இழுத்துள்ளது. இன்னும் சில நாட்களில் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைக்கிறார் என்றும் மக்களவைத் தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் அவர் போட்டியிடப் போவதாகவும் அந்தக் கட்சியினர் தெரிவித்துள்ளனர். 

மும்பை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை நடிகை ஊர்மிளா நேற்று சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் சேர சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த வார இறுதியில் அவர் கட்சியில் சேர இருப்பதாகவும் அதன்பின் மும்பை வடக்கு தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்படுவார் என்றும் மும்பை காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதை சஞ்சய் நிருபமும் உறுதி செய்துள்ளார்.

இந்த தொகுதியில் போட்டியிட, நடிகை நக்மா உட்பட மேலும் சிலரின் பெயர் காங்கிரஸ் சார்பில் பரிசீலிக்கப்பட்டது என்றும் கடைசியில் ஊர்மிளா, கட்சியில் சேர சம்மதித்ததால் அவரையே வேட்பாளராகக் களமிறக்க கட்சி முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதே தொகுதியில் 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரபல நடிகர் கோவிந்தா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை அடுத்து அடுத்த மற்றொரு நட்சத்திர வேட்பாளர் இப்போது இத்தொகுதியில் போட்டியிடப் போகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com