திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது புகார்!

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது புகார்!

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது புகார்!
Published on

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தெலுங்கு பட வசனகர்த்தா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

விக்ரம் பிரபு நடித்த ’அரிமாநம்பி’ விக்ரம் நடித்த ’இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் அடுத்து இயக்கும் படம், ’நோட்டா’. இதில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் மெஹ்ரின் ஹீரோயினாக நடிக்கிறார்.

(மெஹ்ரின்)

இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இவர் மீது தெலுங்கு வசனகர்த்தா ஷசாங் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 


அதில், ‘இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு நான் வசனம் எழுதினேன். எனக்கு சம்பளம் பேசப்பட்டிருந்தது. ஆனால் இப்போது படத்தின் போஸ் டரில் எனது பெயருக்குப் பதில் வேறொருவர் பெயர் இடம்பெற்றுள்ளது. எனக்கு பேசிய சம்பளமான ரூ.15 லட்சத்தையும் அவர் தரவில்லை. அவரிடம் அதை பெற்று தரவேண்டும்’ என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com