ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் விரைவில் இந்தி திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் வழக்கு ஒன்றில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருகிறார். இந்நிலையில் இவருடைய மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அவர் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக பதவிவும் வகித்துள்ளார். ஏற்கனவே போஜ்புரி மொழி திரைப்படம் ஒன்றில் மாநில முதல்வர் வேடத்தில் தேஜ் பிரதாப் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மற்றும் அவரது அதிகார பூர்வ டிவிட்டர் பதிவில், ஜீன்ஸ், டி சர்ட், கண்ணாடி அணிந்தபடி விரைவில் திரைக்கு வருகிறது என்ற வாசகத்துடன் ஒரு பதிவு இடம் பெற்றுள்ளது. படத்தின் பெயர் ஸ்ரீருத்ரா - தி அவதார் எனவும் அதில் கதாநாயகனாக தேஜ் பிரதாப் நடிக்கிறார் எனவும் தெரியவந்துள்ளது. இந்த பதிவு சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.